தொழு நோய் பாதித்த 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய "மை தருமபுரி நண்பர்கள்"குழுவினர்.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எதிரோலி காரணமாக 144 -தடை ஊரடங்கால் உணவின்றி தவித்த தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் உள்ள தொழு நோய் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கு
மை தர்மபுரிமற்றும் மக்கள்பாதை, பியூஷன் சோஷியல் கிளப் சார்பாக 80 குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கினர். இது மட்டுமின்றி கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தர்மபுரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 300 பேருக்கு மை தருமபுரி நண்பர்கள் சார்பாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் வழங்கப்பட்டன. இதுமட்டுமின்றி தர்மபுரி மாவட்டம் சோகத்தூரில் உள்ள கருணை இல்லத்திற்கு உணவு பொருட்கள் வழங்கி உள்ளனர்.ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் 144 தடையால் உணவு பொருட்கள் இன்றி தவித்ததோர்க்கு உணவு பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்குவது என பல்வேறு நல் உதவிகளை செய்யும் மை தர்மபுரி நண்பர்கள் குழுவிற்கு மக்கள் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்