புதுச்சேரி பவர் சோப் தொழிற்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர் ஏழுமலைமரணம்

புதுச்சேரி பவர் சோப் தொழிற்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர் ஏழுமலைமரணம்


" alt="" aria-hidden="true" />


புதுச்சேரியில் செம்பியபாளையம்        பவர்சோப் (அபிராமிசோப்) தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் பதினைந்து வருடமாக பணிபுரிந்து வந்த தொழிலாளர் ஏழுமலை அவர்கள்  கொரோனா நுண்ணுயிர் தொற்றுநோய் தடுப்பதற்காக புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறை உள்ள சூழலில் புதுச்சேரி மாவட்டாட்சியர் அவர்களிடம் அத்தியாவசிய பொருள் என சிறப்பு அனுமதி பெற்று தொழிற்சாலையை இயங்கி வந்த சூழலில் நேற்று தொழிற்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் பொழதே தொழிலாளர் ஏழுமலை உயிர்இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது தொழிலாளர் ஏழுமலை இழந்து வாடும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் நாம்தமிழர்கட்சி நாம்தமிழர்தொழிலாளர் நலச்சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அக்குடும்பம் உறவுகளின்  துயரத்தில் பங்கேற்கிறோம்..!    இந்திய நாடு/புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொரோனா நுண்ணுயிர் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது இத்தகைய கடுமையான சூழலில் எப்பொழுதும் பொருளாதார நெருக்கடி எந்த கார்ப்பரேட் முதலாளியையும் உயிர் இழந்தது இல்லை  தொழிற்சங்கதலைவர்கள் நாங்கள் எது நடக்க கூடாதென்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக  புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறை உள்ள சூழலில் புதுச்சேரி மாவாட்டாட்சியர் தொழிற்சாலைகளுக்கு இயங்க சிறப்பு அனுமதி வழங்கியதனை திரும்ப பெற வலியுறுத்தியும் வந்தோம்..!  புதுச்சேரிஅரசு. புதுச்சேரி மாவாட்டாட்சியர் அலட்சிபோக்கினால்  இத்தகைய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.                              தொழிலாளர் ஏழுமலை உயிரிழப்பிற்கு புதுச்சேரி அரசு பொறுப்பு ஏற்கவேண்டும்..! இக்கடுமையான சூழலில் தொழிலாளர் ஏழுமலை இழந்து வாடும் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையும்பெற்று தர தொழிலாளர் துறை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்  அக்குடும்ப உறவுகளில் ஒருவருக்கு அரசுபணியினை வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் தொழிலாளர்நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது..!  புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள சூழலில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் மிகுந்த நெருக்கடிக்குட்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்   புதுச்சேரி அரசு புதுச்சேரி மாவட்டாட்சியர் அவர்கள் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள சூழலில் இயங்கிவரும்  தொழிற்சாலைகளின்  சிறப்பு அனுமதியினை உடனே திரும்பபெற வேண்டுமென                 நாம் தமிழர் கட்சி              நாம்தமிழர்தொழிலாளர் நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது..! இரமேசு தெரிவித்துள்ளார்